கடவூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

கடவூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
கடவூர் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரணக் கூட்டம் ஒன்றியக்குழு கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத்தலைவர் கைலாசம், ஒன்றிய ஆணையர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதற்கு பதிலளித்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், கோரிக்கை விடுக்கப்படும் அனைத்து பணிகளும், ஒன்றிய பொறியாளர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தவமணி, ரவிசந்திரன், மகாலட்சுமி, கிருஷ்ணகுமாரி பாஸ்கர், நிர்மலா, கோமதி பிரபாகரன், தனம் பாலு, சுந்தரபாண்டியன், ராமமூர்த்தி, சரோஜா, லோகநாதன், சுமதிமோகன், மலையாண்டி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பெறியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






