காடையாம்பட்டி ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ
காடையாம்பட்டி ஏ.டி.எம். மையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
சேலம்
ஓமலூர்:
ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நடராஜ் (வயது 78) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் ஒரு அறையில் தனியார் வங்கிக்கான ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென ஏ.டி.எம். மையத்தில் தீப்பிடித்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஏ.டி.எம். மைய மின்பெட்டியில் ஏற்பட்ட தீயை கார்பன்டை ஆக்சைடு செலுத்தி அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story