கடையநல்லூர் நகராட்சி கூட்டம்
கடையநல்லூர் நகராட்சி கூட்டம் நடந்தது.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு அலுவலர் காஜா மைதீன், ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மேலாளர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
கூட்டத்தில், கடையநல்லூர் தாலுகாவிற்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைத்து தருவதற்கு தமிழக அரசை கேட்டுக் கொள்வது, கடையநல்லூர் பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியினை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்பன உள்பட 25-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story