கடையநல்லூர் நகராட்சி கூட்டம்
கடையநல்லூர் நகராட்சி கூட்டம் நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர்மன்ற துணை தலைவர் ராசையா, ஆணையாளர் (பொறுப்பு) தென்காசி பாரிஜாள், மேலாளர் சண்முகவேல், இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், சுகாதார ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் அக்பர் அலி (முஸ்லிம் லீக்), பூங்கோதை கருப்பையா தாஸ் (அ.தி.மு.க.), சுபா ராஜேந்திரன், யாசர்கான் (எஸ்.டி.பி.ஐ) உள்பட பலர் பேசினர். அப்போது தாமிரபரணி கூட்டுக் குடிநீர் சட்டத்தை அனைத்து வார்டுகளுக்கும் வழங்க வேண்டும் என உறுப்பினர்களின் கேள்விக்கு, கடையநல்லூர் நகர் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீரை வழங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடப்பதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.