கடையநல்லூர் யூனியன் கூட்டம்


கடையநல்லூர் யூனியன் கூட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2023 12:30 AM IST (Updated: 22 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் யூனியன் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் முத்துப்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகன், உதவிபொறியாளர் ஜான் சுகிர்தராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கீதா மணிகண்டன், அருணாசல பாண்டியன், சிங்கிலிபட்டி மணிகண்டன், மாரியம்மாள், மாரிச்செல்வி, பகவதியப்பன், சத்தியகலா தீபக், சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அரசு அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்களை மதிப்பதே இல்லை. கவுன்சிலர்கள் யார் யார் என்பதும், அலுவலகத்தில் பணி செய்யும் பணியாளர்களுக்கு தெரியவில்லை என்று கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினார்கள். இதைதொடர்ந்து அனைத்து பணியாளர்களுக்கும் கவுன்சிலர்களை அறிமுகப்படுத்தி வைக்கும் விதத்தில் அலுவலகத்தை காலி செய்துவிட்டு கூட்ட அரங்கத்திற்கு வந்தனர்.


1 More update

Next Story