தாராபுரம் காடு அனுமந்தராய சாமி கோவில் தேரோட்டத்தில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கிருஷ்ணா குமார் விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கா பக்தர்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தாராபுரம் காடு அனுமந்தராய சாமி கோவில் தேரோட்டத்தில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கிருஷ்ணா குமார் விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கா பக்தர்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
x

தாராபுரம் காடு அனுமந்தராய சாமி கோவில் தேரோட்டத்தில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கிருஷ்ணா குமார் விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கா பக்தர்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருப்பூர்

தாராபுரம்

தாராபுரம் காடு அனுமந்தராய சாமி கோவில் தேரோட்டத்தில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கிருஷ்ணா குமார் விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கா பக்தர்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்றது

தாராபுரம் காடு அனுமந்தராய சாமி கோவில். தாராபுரத்தில் வியாசராயர் சாமிகள் இந்தியா முழுவதும் 732 ஆஞ்ச நேயமூர்த்திகளை பிரதிஷ்டை செய்து இருந்தார். இதில் 89-வது மூர்த்தியே தாராபுரம் ஆஞ்சநேயர்.பொதுவாக சீதா, ராமர் கோவில்களில் மூலமூர்த்தியாக சீதா, ராமர் இருக்க உற்சவமூர்த்தியாக ஆஞ்சநேயர் இருப்பது வழக்கம். ஆனால் தாராபுரத்தில் 7 அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்க உற்சவ மூர்த்திகளாக சீதா, ராமர் வீற்றிருப்பது தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலின் தனி சிறப்பாகும்.ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இதன் காரணமாக மூலஸ்தானத்தின் மேற்கூரையில் எப்போதும் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லும் வகையில் திறந்த நிலையிலேயே கோவில் இருப்பது இங்கு மட்டுமே.இக்கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து துளசி மாலை சாத்தி ஆஞ்சநேயப்பெருமானை உள்ளம் உருக வேண்டிக்கொண்டால் திருமணத்தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணமாகும். தீராத உடல் பிணிகள் எதுவாக இருந்தாலும் அது குணமாகும் என்பதும் தனிச்சிறப்பு.

இந்த கோவில் தேரோட்டம் நேற்று காலையில் 9 மணிக்கு தேர் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட தேருக்கு பூஜை செய்யப்பட்டது. பிறகு இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா குமார் கலந்து கொண்டு பக்தர்கள் புடைசூழ பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து நகர்த்தினர். பிறகு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் கல்யாணராமர் கோவில் வீதியில் வலம் வந்த தேர் பகல் 12 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது.

தேரோட்டத்தின் போது

ஆர்.டி.ஓ குமரேசன். வட்டாட்சியர் ஜெகஜோதி, நகராட்சி தலைவர் கே.பாப்பு கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபால், திருப்பூர் மாவட்ட ஆவின் துணைத்தலைவர் டி.எஸ்.சிவக்குமார், காளிமுத்து, திமுக நகர செயலாளர் முருகானந்தம். மற்றும் அதிமுக நகர செயலாளர் சி.ராஜேந்திரன்.

ஆகியோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேரோட்டம் ஏற்பாடுகளை

இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செந்தில்குமார்; மற்றும் இந்து அறநிலைத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார். ஆய்வாளர்கள் ஆதிரை.சுமதி.செயல் அலுவலர் மல்லிகா. சுந்தரவடிவேல். அமர்நாதன். ஆகியோர் செய்திருந்தனர், தேரோட்டத்தின் போது 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story