அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழா

முத்துக்கடையில் அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழா நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பஸ் நிலையத்தில் இன்று சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் மற்றும் யாதவ மகாசபையின் சார்பில் கொண்டாடப்பட்டது.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயலாளரும், யாதவ மகாசபையின் இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு குழு செயலாளருமான ஏ.ஆர்.எஸ்.அருள்ராமன் தலைமை தாங்கினார்.
குருபூஜை நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அழகுமுத்துக்கோனின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் நகரச்செயலாளர் சசி, துணை செயலாளர் கார்த்திக், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், லோகு, ஏழுமலை, ஒன்றிய தலைவர் லட்சுமணன், துணைத்தலைவர் ஹரி, பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஏ.ஆர்.எஸ்.அருள்ராமன் மற்றும் பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேசிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அதில், ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவ சிலை அமைக்க வேண்டும். அவரது வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.






