பரிமள ரெங்கநாதர் கோவிலில் கலசாபிஷேகம்
பரிமள ரெங்கநாதர் கோவிலில் கலசாபிஷேகம் நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை திருவிழந்தூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது தலமும், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க தலங்களில் 5-வது தலமுமான திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் உற்சவ மூர்த்திக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடத்தில் புனிதநீர் மாடவீதிகளின் வழியே ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பரிமள ரெங்கநாதர் உற்சவ பெருமாளுக்கு தங்கக்கவசம் களைந்து, ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரம்யா உள்ளிட்டோர் செய்து இருந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story