காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா


காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
x

பனப்பாக்கம் காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

ராணிப்பேட்டை

காளத்தீஸ்வரர் கோவில்

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஞானாம்பிகை உடனாகிய காளத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் நடைபெற்றது.

புனரமைப்பு பணிகள் முடிவந்த நிலையில் குமாபாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற புதன்கிழமை வரை நடைபெற உள்ளது.

விழாவின் முதல் நாளான இன்று காலை 9 மணியளவில் கணபதி ஹோமம், யாக சாலை பிரவேச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் முதற்கால யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5 மணியளவில் மூன்றாம் கால யாகபூஜையும் நடக்கிறது.

கும்பாபிஷேகம்

தொடர்ந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் நான்காம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, 6 மணிக்கு கருவறை விமானங்களுக்கு கும்பாபிஷேகமும், மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், சுவாமி திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா நடைபெறவுள்ளது.

விழாவை முன்னிட்டு இன்று மாலை 5 மணி முதல் மங்கள இசை, 7 மணி முதல் பட்டிமன்றம், நாளை மாலை 5 மணி முதல் திருமுறை சொற்பொழிவு, 6.30 மணி முதல் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, 7.30 மணி முதல் வயலின் இசை நிகழ்ச்சி ஆகியவையும், 7-ந் தேதி மாலை 7 மணி முதல் கயிலாய வாத்தியம் நிகழ்ச்சி நடக்கிறது.


Next Story