மகாசக்தி காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
பர்கூரில் நவராத்திரி விழாவையொட்டி மகாசக்தி காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கிருஷ்ணகிரி
பர்கூர்:
பர்கூர் திருப்பத்தூர் கூட்ரோட்டில் உள்ள மகாசக்தி காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி 9 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காளியம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மன் திருவீதி உலா மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story