காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 5 Jun 2022 8:12 PM IST (Updated: 5 Jun 2022 8:25 PM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகேயுள்ள திம்மணநல்லூர் ஊராட்சி தி.பள்ளப்பட்டியில் காளியம்மன், மந்தைபகவதியம்மன் கோவில்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி விக்னேஷ்வர பூஜை, யாகவேள்விகள், தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றன. விழாவில் நேற்று கோபுர கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் நத்தம் ஆர்.விசுவநாதன் எம்.எல்.ஏ., நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், சாணார்பட்டி அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் க.விஜயன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தர்மராஜன், திம்மணநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story