கலைத்திருவிழா போட்டிகள்
திருப்பூர்
கலைத்திருவிழா போட்டிகள்கலைத்திருவிழா போட்டிகள்
உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-ம் ஆண்டிற்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் 6 முதல் பிளஸ்-2 வரையில் 3 பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் அடுத்த வாரம் உடுமலை வட்டார அளவான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
3 பிரிவுகளிலும் உள்ள பல்வேறு வகையான போட்டிகளில் நூற்றுக்கணக்கான மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் ப.விஜயா ஆலோசனையின்படி போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயராஜ் மஞ்சுளா மற்றும் பள்ளித் தமிழாசிரியர்கள் சின்னராசு, தைலியண்ணன், ராசேந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story