ஐப்பசி கிருத்திகை தினத்தையொட்டி காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை


ஐப்பசி கிருத்திகை தினத்தையொட்டி  காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி கிருத்திகை தினத்தையொட்டி காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை

நாமக்கல்

காளிப்பட்டி:

நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் உள்ள கந்தசாமி கோவிலில் ஐப்பசி கிருத்திகை தினத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து ரோஜா, சம்பங்கி, மருவு, மரிக்கொழுந்து, அரளி, துளசி உள்ளிட்ட மலர்களால் கோவிலில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சாமிக்கு முத்தங்கி ராஜகவச ஆடை அணிவித்து, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இரவு வள்ளி தெய்வானையுடன் முருகன் பல்லக்கில் திருவீதி உலா கோவிலை சுற்றி நடைபெற்றது.

1 More update

Next Story