Normal
அமாவாசையையொட்டி காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
அமாவாசையையொட்டி காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
நாமக்கல்
மல்லசமுத்திரம்:
நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவிலில் அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதையொட்டி மூலவர் கந்தசாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதையடுத்து கோவில் வளாகத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உற்சவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் கோவிலை சுற்றி வலம் வந்தார்.
Related Tags :
Next Story