காளியம்மன் கோவில் கொடை விழா


காளியம்மன் கோவில் கொடை விழா
x
தினத்தந்தி 25 April 2023 12:30 AM IST (Updated: 25 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை காளியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அரசு ஆயுர்வேத வைத்தியசாலை அருகில் சேனைத்தலைவா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் கொடை விழா கடந்த 18-ந் தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் நாம சங்கீர்த்தனம், முளைப்பாரி பக்தா்களின் கும்மி பாடல், சிறப்பு பூஜை, சமய பக்தி சொற்பொழிவு, திருவிளக்கு வழிபாடு, திருவாசகம் முற்றோதுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

நேற்று மாலையில் வில்லிசை, செங்கோட்டை குண்டாற்றில் இருந்து குற்றால தீர்த்தம் எடுத்து வருதல், கும்மி பாட்டு சிறப்பு பூஜை நடைபெற்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 27-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் தலைவா் சுப்பையா, செயலாளா் சண்முகவேல், பொருளாளா் லெட்சுமணன், இளைஞர் சங்க நிர்வாகிகள் தலைவா் ஜெகநாதன், செயலாளா் சிவா, பொருளாளா் காளிராஜ் உள்ளிட்டவர்கள் செய்து உள்ளனர்.


Next Story