கலியுக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா


கலியுக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
x

விழுப்புரம் கலியுக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் கே.கே.சாலை பார்த்தசாரதி லே-அவுட் பகுதியில் பிரசித்தி பெற்ற கலியுக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 15-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.தொடர்ந்து, அன்று வாஸ்துசாந்தி, பிரவேச பலி, ரக்‌ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல்கால யாக சாலை பூஜை, மகா பூர்ணாகுதியும், நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதியும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

இதனை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு மேல் கோ பூஜை, வேதிகா பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, 4-ம் கால யாகசாலை பூஜையும், 9 மணிக்கு மகா பூர்ணாகுதியும், 9.45 மணிக்கு கடம் புறப்பாடும், 10.15 மணியளவில் கோவிலின் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தது. பின்னர் 10.30 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் கே.கே.சாலை பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கே.கே.சாலை, பார்த்தசாரதி லே-அவுட் மற்றும் நகர பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story