கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன் குமார் தொிவித்துள்ளாா்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர். உளுந்தூர்பேட்டை ஆகிய தாலுகாக்களில் உள்ள 44 கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்ச தகுதியாக 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க மற்றும் சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயதுடையவராகவும், பொதுப்பிரிவினர்களுக்கு அதிகபட்சம் 32 வயதுடையராகவும், இதர பிரிவினர்கள் 37 வயதுடையவராகவும் இருத்தல் வேண்டும்.
இப்பணியிடத்திற்கு இனசுழற்சி முறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேர்க்காணல் மூலம் நியமனம் செய்யும் பொருட்டு மனுதாரர்கள் சுய விலாசமிட்ட உரையுடன் பெயர் மற்றும் முகவரி, பிறந்த தேதி, வயது, சாதி, வருமானம், இருப்பிட சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகிய நகல்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை (இருப்பின்) நகல் முன்னுரிமைக்கான சான்று மற்றும் பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவண நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் அடுத்த மாதம்(நவம்பர்) 7.11.2022-ந் தேதி வரை காலை 10 மணி முதல் 2 மணி வரை (அரசு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறறுக்கிழமைகள் தவிர்த்து) விண்ணப்பதாரர்கள் நேரடியாகவும் அல்லது தமிழக அரசின் இணையதளம் (http://www.tn.gov.in), வருவாய் நிர்வாக துறையின் இணையதளம் (http://cra.tn.gov.in) மற்றும் http://kallakurichi.nic.in/ என்ற கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.