கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
பெண் பக்தர்கள் தங்கள் தலைகளில் முளைப்பாரி மற்றும் தீச்சட்டிகளை சுமந்து ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதி திருவரங்கம் மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாரானை காட்டப்பட்டது.
தொடர்ந்து மக்கள் நோய் நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் பெண் பக்தர்கள் தங்கள் தலைகளில் முளைப்பாரி மற்றும் தீச்சட்டிகளை சுமந்து ஊர்வலமாக வந்து வழிபட்டனர். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story