கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்; பேரணி செல்ல சமூக வலைத்தளம் மூலம் அழைப்பு - 3 பேர் கைது

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பேரணி செல்ல சமூக வலைத்தளம் மூலம் அழைப்பு விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு பெரம்பலூரில் இன்று அமைதியான முறையில் பேரணி நடைபெற உள்ளது என்று சமூக வலைத்தளமான முகநூல் (பேஸ்புக்) உள்ளிட்டவை மூலம் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது.
இதனை பலர் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து வந்ததால் அந்த தகவல் காட்டு தீ போல் வேகமாக பரவியது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் யார் என்று விசாரித்து வந்தனர்.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்கள் பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த செல்வராஜீன் மகன் தீபக் (வயது 26), நியூ காலனியை சேர்ந்த திருநாவுக்கரசின் மகன் சூர்யா(21), பெரம்பலூர் கம்பன் தெருவை சேர்ந்த சுரேசின் மகன் சுபாஷ்(21) ஆகிய 3 பேர் என்பது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர்கள் 3 பேரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.






