கள்ளக்குறிச்சி மாணவி இறந்த சம்பவம்: கைதான 5 பேர் மீண்டும் சேலம் சிறையில் அடைப்பு
கள்ளக்குறிச்சி மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக: கைதான 5 பேர் மீண்டும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் மற்றும் ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களை ஒருநாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலம் சிறையில் இருந்து பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் விழுப்புரத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நேற்று அதிகாலை 3 மணியளவில் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story