பருவநிலை மாற்றத்தால் காலிபிளவர் செடிகள் பாதிப்பு


பருவநிலை மாற்றத்தால் காலிபிளவர் செடிகள் பாதிப்பு
x

பருவநிலை மாற்றத்தால் காலிபிளவர் செடிகள் பாதிப்பு

திருப்பூர்

போடிப்பட்டி

குடிமங்கலம் பகுதியில் பருவநிலை மாற்றத்தால் காலிபிளவர் சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய பூக்களால் மகசூல் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கூடுதல் வருவாய்

குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. அதுதவிர தக்காளி, வெங்காயம், பீட்ரூட், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமான காய்கறிகள் சாகுபடியை விட காலிபிளவர், முட்டைகோஸ் உள்ளிட்ட மலைப்பயிர்கள் சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் வாய்ப்புள்ளதாக ஒருசில விவசாயிகள் கருதுகிறார்கள். அதனடிப்படையில் சமவெளிப் பகுதிகளில் பயிரிடும் வகையிலான ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்துள்ளனர். ஆனாலும் இது அனைத்து விவசாயிகளுக்கும் கைகொடுக்காத பயிராகவே உள்ளது.இந்த வகைப் பயிர்களின் மகசூலை தீர்மானிப்பதில் மண்ணின் தன்மை மட்டுமல்லாமல் பாசன நீரின் தரம் மற்றும் பருவநிலை முக்கிய பங்கு வகிக்கிறது.பருவநிலை மாற்றத்தால் காலிபிளவர் சாகுபடியில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

சாரல் மழை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

புதிய முயற்சியாக சொட்டுநீர்ப் பாசனத்தில் காலிபிளவர் சாகுபடி மேற்கொண்டுள்ளோம்.பொதுவாக குடிமங்கலம் வட்டாரத்தில் நிலத்தடி நீர் சற்று கடினத்தன்மை கொண்டதாக இருக்கும்.கடினத்தமை கொண்ட தண்ணீரிலும் உப்பு நீரிலும் பீட்ரூட் நல்ல மகசூல் கொடுக்கிறது.ஆனாலும் எல்லா காலங்களிலும் பீட்ரூட்டுக்கு போதிய விலை கிடைக்காத நிலையே உள்ளது. இதுவே காலிபிளவர் சாகுபடியைத் தேர்வு செய்வதற்கு அடிப்படை காரணமாக இருந்தது. ஆனால் காலிபிளவர் சாகுபடியைப் பொறுத்தவரை பராமரிப்புக்கென கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக பூச்சி, நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்க அதிக அளவில் மருந்து தெளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.வெயில், மழை என அடுத்தடுத்து மாறும் பருவநிலையால் பயிர் பாதிப்பு ஏற்படுகிறது.பருவநிலை மாற்றத்தால் பூக்கள் சிறுத்து உள்ளன. மேலும் அறுவடை சமயத்தில் ஏற்பட்டுள்ள தொடர் சாரல் மழையால் பூக்கள் அழுகி வீணாகி உள்ளன. இதனால் எதிர்பார்த்த மகசூல் ஈட்ட முடியாத நிலையில், இழப்பு ஏற்பட்டுள்ளது.

மண் பரிசோதனை

விவசாயிகள் புதிய ரக பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்யும் முயற்சி வரவேற்கப்பட வேண்டிட விஷயமாக கருதப்படுகிறது.அதேநேரத்தில் உரிய வழிகாட்டல்கள் இல்லாமல் புதிய ரகங்களை பயிர் செய்வது இழப்புக்கு வழிவகுக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டோம்.மேலும் குறிப்பிட்ட கால அளவில் மண் மற்றும் பாசன நீரை பரிசோதனை செய்து, அதற்கேற்ற ரகங்கள் குறித்த பரிந்துரை பெற்று சாகுபடி மேற்கொள்வது இழப்பை தவிர்க்க உதவும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

----------

2 காலம்

குடிமங்கலம் பகுதியில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள காலிபிளவர்


Next Story