வீர, தீர செயல்புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது


வீர, தீர செயல்புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது
x

வீர, தீர செயல்புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது

மயிலாடுதுறை

இந்த ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீர, தீர செயல்புரிந்த தமிழகத்தை சார்ந்த பெண் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும். இந்த விருதினை பெறுவதற்கு சமூகத்தில் தாமாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், வீர, தீர செயல்களை செய்திருக்க வேண்டும். இந்த விருதினை பெறுவதற்கு வீர, தீர செயல் புரிந்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் தமிழ் மற்றும் ஆங்கில விண்ணப்பங்களில் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை https://awards.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் வருகிற 30-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டுப்பிரிவு, நாகப்பட்டினம் என்னும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வருகிற 24-ந் தேதிக்குள் இரண்டு நகல்கள் (தமிழ்-2 மற்றும் ஆங்கிலம்-2) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04365-253059, 74017 03497 என்ற எண்களில் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவல் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.





1 More update

Next Story