கல்வராயன்மலையில் தொடர் மழை: பெரியார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கல்வராயன்மலையில் தொடர் மழை:  பெரியார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x

கல்வராயன்மலையில் பெய்த தொடர் மழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

தொடர் மழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கிழக்கு மலை தொடர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கும் கல்வராயன் மலை சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு கவியம், மேகம், பெரியார் என்று 5-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. தற்போது மலை பகுதியில் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் இந்த நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது.

இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், மலைப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. கள்ளக்குறிச்சி மட்டுமின்றி விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து இருந்தனர். இவர்கள் பெரியார் உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

ஏமாற்றம்

கல்வராயன்மலையில் உள்ள படகு குழாமில் தற்போது படகுகள் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அங்கு படகுகள் எதுவும் இயங்கவில்லை. இதனால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story