கல்வராயன்மலை ஒன்றியக்குழு கூட்டம்


கல்வராயன்மலை ஒன்றியக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலை ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாஷாபீ ஜாகிர்உசேன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கியசாமி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் மோகன் குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கல்வராயன்மலையில் உள்ள 15 ஊராட்சிகளிலும் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வி, சுகாதாரம் என மக்களின் அடிப்படை தேவைகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் சின்னத்தம்பி, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்லதுரை, மலர்ராஜ்குமார், மின்னல் கொடி சக்திவேல், பார்வதி அண்ணாமலை, செல்வராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரத்தினம், குப்புசாமி, ஆண்டி, சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.


Next Story