கல்யாண ராமசாமி கோவில் தேரோட்டம்


கல்யாண ராமசாமி கோவில் தேரோட்டம்
x

மீமிசல் கல்யாண ராமசாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை

கல்யாண ராமசாமி கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் கல்யாண ராமசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 18-ந்தேதி கொடிேயற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதைெதாடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கல்யாண ராமசாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார்.

தேரோட்டம்

இதைதொடர்ந்து புதுக்கோட்டை உதவி ஆணையர் அனிதா மற்றும் சந்திரசேகரன், செயல் அலுவலர் அருணா தேவி ஆகியோர் தலைமையில், ஆலத்தூர், மீமிசல் குடியிருப்பு அம்பலங்கள் மற்றும் கிராமத்தார்கள் முன்னிலையில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் நான்கு வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடியிருந்து தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story