கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி திருவிழா நிறைவு


கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி திருவிழா நிறைவு
x

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி திருவிழா நிறைவு பெற்றது.

கரூர்

புரட்டாசி திருவிழா

கரூர் தாந்தோணிமலையில் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 18-ந்தேதி கொடியேற்றமும், 24-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், 26-ந்தேதி தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தினமும் கருட வாகனம், அன்னப்பறவை வாகனம், சிம்ம வாகனம், வெள்ளி அனுமன் வாகனம், வெள்ளி கருட வாகனம், ஐந்து தலை நாக வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், லட்சுமி வாகனம், பின்னக்கிளை வாகனம், துளசி வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நிறைவு

கடந்த 3-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 6-ந்தேதி முத்து பல்லாக்கும், 8-ந்தேதி ஆளும் பல்லாக்கும் நடைபெற்றது. இந்நிலையில் புரட்டாசி திருவிழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய வெங்கடரமணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் மண்டபத்தில் சுவாமிகளுக்கு வண்ணப்பூக்களால் வேள்வி நடைபெற்றது.

இதில் கரூர், தாந்தோன்றிமலை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story