கல்வி-தனித்திறன்களில் சிறந்து விளங்கிய 30 மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது


கல்வி-தனித்திறன்களில் சிறந்து விளங்கிய 30 மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது
x

கல்வி-தனித்திறன்களில் சிறந்து விளங்கிய 30 மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் கல்வி செயல்பாடுகள் மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கல்வி செயல்பாடுகள் மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகள் தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர். அதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் 15 பேர், 12-ம் வகுப்பில் 15 பேர் என மொத்தம் 30 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது. மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையாக தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையாக தலா ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையும் என மொத்தம் ரூ.4.50 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். மேலும், ஒவ்வொரு மாணவ-மாணவிகளிடமும் எதிர்கால லட்சியத்தினை கேட்டறிந்து, அதனை எட்டும் வரை கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாராட்டினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story