காமராஜர் பிறந்த நாள் விழா


காமராஜர் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை, காளையார்கோவிலில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை, காளையார்கோவிலில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மாணவர்களுக்கு பரிசு

சிவகங்கையை அடுத்த சோழபுரம் ரமண விகாஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா பள்ளி தாளாளர் முத்து கண்ணன் தலைமையில் நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் கணேஷ் வரவேற்று பேசினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், சிவகங்கை நகரசபை தலைவர் துரை ஆனந்த், சோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சேவியர், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் முத்துச்சாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் மின்சாரத்தை உற்பத்தி செய்து இயங்கக்கூடிய சைக்கிளை கண்டுபிடித்த முகமது அர்ஷத் ரோஷன் என்பவருக்கு பள்ளி சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் அருள் ஆரோக்கியம் நன்றி கூறினார்.

கானாடுகாத்தான்

கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா பள்ளியின் மேலாளர் சுப்பையா தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை மகாலெட்சுமி வரவேற்றார்.. விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவியும் மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லூரியின் விரிவுரையாளருமான பொன்வடிவு சிறப்புரையாற்றினார். இதையொட்டி மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியபோட்டி நடைபெற்றது. முடிவில் தமிழாசிரியை லதா நன்றி கூறினார்.

சிவகங்கை பாலமுருகன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் பள்ளி நிர்வாகி குமார் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை உஷா வரவேற்றார். 3, 4, 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் காமராஜரைப்பற்றி உரையாற்றினா். விழா ஏற்பாட்டினை ஆசிரியை ஐஸ்வர்யா செய்திருந்தார்.

சிவகங்கை சாய் பால மந்திர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவில் ஆசிரியை ரேணுகா வரவேற்றார். பள்ளி நிர்வாகி குமார் கலந்து கொண்டு காமராஜரை பற்றி சிறப்புரையாற்றினார். முடிவில் ஆசிரியை இந்திரா நன்றி கூறினார்.

மரக்கன்றுகள்

காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை ஜோஸ்பின் லதா தலைமை தாங்கினார். இடைநிலை ஆசிரியர் நாகராஜன் வரவேற்றுப் பேசினார். காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி கட்டுரைப் போட்டிகள் நடத்தி முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடை, நோட்டுகள், பேனாக்கள், பென்சில்கள், ரப்பர்கள், மரக்கன்றுகள், மா, பலா, கொய்யா போன்ற மரக்கன்றுகள் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இவற்றை காளையார்கோவில் பாஸ்டின் நகரைச் சேர்ந்த மாணவர்கள் வழங்கினர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளை பள்ளியின் இடைநிலை ஆசிரியை சகாய நிர்மலா ராணி ஏற்பாடு செய்தார். பிளஸ்-2 பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவீதம் பெற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் பள்ளி வளாகத்தில் சாரண ஆசிரியர் நாகராஜன் உதவியுடன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் காயத்ரி மரக்கன்றுகளை நட்டார். மூலிகை தோட்டத்திலும் மூலிகைச் செடிகளை நட்டார். பள்ளியின் தமிழ் ஆசிரியை காதம்பரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முதுகலை ஆங்கில ஆசிரியர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story