காமராஜர் பிறந்தநாள் விழா


காமராஜர் பிறந்தநாள் விழா
x

நெல்லையில் காமராஜர் பிறந்தநாள் விழா ெகாண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. அயலக அணி சிங்கப்பூர் துணை பொறுப்பாளர் எஸ்.ஜே.மகா கிப்ட்ஸன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுரண்டையில் நாடார் எழுச்சி பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, கல்வியில் சிறந்த மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சிவகுருநாதபுரம் காமராஜர் சிலை முன்பு நடந்தது. நாடார் எழுச்சி பேரவை மாநில தலைவர் வக்கீல் எம்.சின்னதம்பி தலைமை தாங்கினார். நகர தலைவர் பால்சாமி, மகாத்மா காந்தி கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகசுந்தரம், காமராஜர் சிலம்பாட்ட குழு செயலாளர் வி.கே.ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட பேரவை செயலாளர் டைசன் வரவேற்றார். தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார், தி.மு.க அயல்நாட்டு அணி துணை பொறுப்பாளர் சிங்கப்பூர் எஸ்.ஜே.மகா கிப்ட்ஸன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் நெல்லை நாடார் உறவின்முறை நிர்வாகிகள் அசோகன், மகாலிங்கம், நாடார் எழுச்சி பேரவை பொருளாளர் முருகேசன், காமராஜர் சிலம்பாட்ட குழு தலைவர் பாண்டி நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்‌. முடிவில் ஆசிரியர் கனகருண் நன்றி கூறினார்.


Next Story