அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா


அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 16 July 2023 7:30 AM IST (Updated: 16 July 2023 7:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கல்வி வளர்ச்சி நாள்

பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை தாங்கினார். மாணவர் வேதமாதவன் காமராஜர் வேடம் அணிந்து அவரை பற்றி பேசினார். இதை தொடர்ந்து மாணவர்களுக்கு கவிதை, பேச்சு, பாட்டு, மாறுவேட போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா, பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் ஜெகதீஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பக்கோதிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜேக்கப்பால் மாணிக்கராஜ் வரவேற்று பேசினார். விழாவில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஆர்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பேரிஸ் பேகம் தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் சண்முகசுந்தரம் காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் பட்டதாரி ஆசிரியை கனகமணி நன்றி கூறினார்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியயை ஜெ.தேன்மொழி தலைமை தாங்கி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நெ.10.முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை நர்மதா தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முடிவில் பள்ளி ஆசிரியை ராணி நன்றி கூறினார். இதேபோல் கிணத்துக்கிட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

வால்பாறை

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு காமராஜர் பிறந்த நாள் விழா ஓவிய போட்டி, பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இதில் வென்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் பரிசுகள் வழங்கினார்.

இதேபோல் உருளிக்கல் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஒவியம், பேச்சு போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


Next Story