பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா


பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா
x

பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

காமராஜர் பிறந்த நாள்

பொள்ளாச்சியை அடுத்த எஸ்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவுசல்யா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப்பால் மாணிக்கராஜ் வரவேற்றார். விழாவில் காமராஜர் உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

வடக்கு ஒன்றியம் கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் தினகரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் காயத்திரி முன்னிலை வகித்தார்.

இதையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் ஆசிரியை சத்யா நன்றி கூறினார்.

தொப்பம்பட்டி பள்ளி

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காம ராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி விழாவாக நடைபெற் றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் மனோ ரஞ்சிதம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். விழாவில் காமராஜர் உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவ -மாணவிகள், பள்ளி அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாணவிகளுக்கு போட்டி

பொள்ளாச்சி நேதாஜி ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. வ பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கோமதி முன்னிலை வகித்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் வரவேற்றார்.

விழாவில் காமராஜர் உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பாட்டு, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர் ஜெய்லாப்தீன், துணை தலைவர் காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதற்கு, குமாரபாளையம் ஊராட்சி தலைவர் சாவித்திரி கனக ராஜ் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது. முடிவில், தலைமையாசிரியர் மரகதம் நன்றினார்.

செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கே.டி.பழனிச்சாமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் காமராஜர் பற்றி பேசினார்.

இது போல் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காமராஜர் பிறந்த விழா கொண்டாடப்பட்டது.


Next Story