அரசு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா


அரசு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
x

விளாத்திகுளம் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் சாந்தி தலைமை தாங்கினார். விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக விடியல் டிரஸ்ட் நிறுவனர் ஜோதிமணி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பார்த்திபன், விவேகானந்தன், சத்தீஸ்வரி மற்றும் பலர் செய்திருந்தனர்.

விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயாவில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அம்பாள் வித்யாலயா கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை தலைவர் வீமராஜ் தலைமை தாங்கினார் அம்பாள் வித்யாலயா இயக்குனர் இந்திரா ராமராஜ் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் ஆபிரகாம் வசந்தன் வரவேற்றார். இதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி, காமராஜரின் வாழ்க்கை நெறிகளை பற்றி பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story