காமாட்சிபுரம், எரசக்கநாயக்கனூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


காமாட்சிபுரம், எரசக்கநாயக்கனூர் பகுதிகளில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
x

காமாட்சிபுரம், எரசக்கநாயக்கனூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தேனி

மின்சாரம் நிறுத்தம்

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம், சின்னஓவுலாபுரம் துணை மின்நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், காமாட்சிபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூழையனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கும், சின்னஓவுலாபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், இந்திரா காலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கும் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இத்தகவலை சின்னமனூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ரமேசுகுமார் தெரிவித்தார்.

கடமலைக்குண்டு

தேவாரம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட தம்மிநாயக்கன்பட்டி மின்தொடரில் மட்டும் மிகவும் அத்தியாவசியமான பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், டி.சொக்கலிங்கபுரம், டி.ரெங்கநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.

இதேபோல் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை, காந்தி நகர் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அனுமார் கோவில், காந்திநகர், மதுரை ரோடு, எ.புதுக்கோட்டை, பங்களாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.


Next Story