கம்பம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரத்தசோகை குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு


கம்பம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  ரத்தசோகை குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு
x

கம்பம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரத்த சோகைக்கான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது

தேனி

கம்பம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரத்த சோகைக்கான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு தேசிய சித்த மருத்துவ இயக்குனர் ஆர்.மீனாகுமாரி தலைமை தாங்கினார். தேசிய சித்த மருத்துவ நிறுவன இணை பேராசிரியர் இளஞ்சேகரன் வரவேற்று பேசினார். கம்பம் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன், பள்ளி தலைமை ஆசிரியை ஆரோக்கியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மற்றும் தேனி மாவட்ட அரசு சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன், கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முருகன் உள்பட பலர் ரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள், நோய் கண்டறியும் முறைகள் குறித்து பேசினர்.

பின்னர் முகாமில் மாணவிகளுக்கு ரத்த சோகையை கண்டறிய சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து தேசிய சித்த மருத்துவ இயக்குனர் மீனாகுமாரி கூறியதாவது, ரத்த சோகையினை கண்டறிந்து மருந்துகள் வழங்கும் விதமாக தற்காலிமாக, கம்பத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் திட்ட அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story