கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை பகுதியில்நெல் அறுவடை பணி தீவிரம்


கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை பகுதியில்நெல் அறுவடை பணி தீவிரம்
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கடைமடை பகுதியில் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 2-ம் போக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக முல்லைப்பெரியாற்றில் போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் 2-ம் போக நெல் சாகுபடி கம்பம் பள்ளத்தாக்கின் தொடக்க பகுதியில் மட்டும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வருடம் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து இருந்தது. இதன் காரணமாக கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை பகுதியான உப்புக்கோட்டை, உப்பார்பட்டி, வீரபாண்டி, சடையால்பட்டி, போடேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பயிரிடப்பட்ட நெல் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story