கம்பம் வாரச்சந்தையில் நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் : வியாபாரிகள் வலியுறுத்தல்


கம்பம் வாரச்சந்தையில்  நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் :  வியாபாரிகள் வலியுறுத்தல்
x

கம்பம் வாரச்சந்தையில் நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்

தேனி

தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பி.செல்வக்குமார், கம்பம் நகர வணிகர் சங்க தலைவர் முருகன், கம்பம் வாரச்சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் அய்யாச்சாமி, செயலாளர் முருகன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கம்பம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியனை சந்தித்து அவர்கள் பேசினர்.

அப்போது சந்தையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் வியாபாரிகளுக்கு கடைகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும், நுழைவு கட்டணத்தை குறைத்து வசூலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு நகர்மன்ற தலைவர் பதில் கூறுகையில், விரைவில் பணிகள் முடிந்து, கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும், நுழைவு கட்டணத்தைப் பொறுத்தவரையில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்பட்டு வருகிறது. கட்டணம் குறைப்பது குறைத்து பரீசீலனை செய்யப்படும் என்றார். இதையடுத்து வியாபாரிகள் திரும்பி சென்றனர்


Next Story