விப்பேடு பழங்குடியினர் குடியிருப்பு ஆய்வு


விப்பேடு பழங்குடியினர் குடியிருப்பு ஆய்வு
x

காஞ்சீபுரம் ஒன்றியம் விப்பேடு ஊராட்சியில் ரூ.268.54 லட்சம் மதிப்பீட்டில் பழங்குடியினருக்காக கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம்

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.18.52 லட்சம் மதிப்பீட்டில் பெரிய குளம் ஆழப்படுத்தும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் விஷார் ஊராட்சியில், சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மேட்டுப்பாளையம் விஷார் இணைப்பு சாலையில் கட்டப்பட்டு வரும் பஸ் நிறுத்த நிழற்குடையையும் கீழ்கதிர்பூரில் ரூ.13.10 லட்சம் மதிப்பீட்டில், கட்டப்பட்டு வரும் புதிய ரேஷன்கடையையும் பார்வையிட்டு, அருகில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வை மேற்கொண்டு அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களின் இருப்பு நிலையை மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து மேல்கதிர்பூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.22.22 லட்சம் மதிப்பீட்டில் செனேரி ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியையும், ரூ.14.23 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரி வரவு கால்வாய் தூர்வாரும் பணியையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், உதவி கலெக்டர் (பயிற்சி) க.சங்கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story