படப்பை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு


படப்பை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு
x

படப்பை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வில் 8,445 மாணவர்களும், 7,989 மாணவிகளும் என மொத்தம் 16,434 மாணவ-மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் மாவட்ட கல்வி அலுவலர் வள்ளிநாயகம், முதன்மைக்கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story