உத்திரமேரூர் அருகே பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்


உத்திரமேரூர் அருகே பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
x

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்திரமேரூர் அருகே பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு அங்குள்ள நோயாளிகளிடம் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். மேலும் மருந்தகத்தில் மருந்து இருப்பு நிலையை பார்வையிட்டார். பின்னர் மானாம்பதி அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளிடம் கலந்துரையாடி, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களுக்கு கொடுக்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு, உணவின் தரத்தை பரிசோதித்தார்.

மேலும் மானாம்பதி கண்டிகையில் ரூ.27.5 லட்சம் செலவிலான பள்ளி கட்டுமான பணிகளையும், அனுமந்தண்டலம் ஊராட்சியில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும், ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் சமையல் கூடத்தையும், ராவத்தநல்லூர் ஊராட்சியில் ரூ.11.10 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து வேடபாளையத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வட்ட செயல்முறை கிடங்கை பார்வையிட்டு, அங்குள்ள பொருட்களின் இருப்பு விவரங்களை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி கட்டிடத்தை பார்வையிட்டு, கட்டுமானப்பணிகளை தரமான முறையிலும், விரைவாகவும் முடிக்கும்மாறும் ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இதில் காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமளா, லோகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி, மானாம்பதி ஊராட்சி மன்ற தலைவர் ராதாநடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story