ரெயில் தாமதமானதை கண்டித்து காஞ்சீபுரம் ரெயில் நிலைய அதிகாரி அலுவலகம் முற்றுகை


ரெயில் தாமதமானதை கண்டித்து காஞ்சீபுரம் ரெயில் நிலைய அதிகாரி அலுவலகம் முற்றுகை
x

ரெயில் தாமதமானதை கண்டித்து காஞ்சீபுரம் ரெயில் நிலைய அதிகாரி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

காஞ்சிபுரம்

தாமதமான ரெயில்

காஞ்சீபுரத்தை அடுத்த திருமால்பூரில் இருந்து காஞ்சீபுரம், செங்கல்பட்டு மார்க்கமாக தினந்தோறும 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருமால்பூர் மற்றும் காஞ்சீபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் இந்த ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை திருமால்பூரில் இருந்து வழக்கமாக காலை 7 மணி அளவில் புறப்படும் ரெயில் கூரம் அருகே வந்து கொண்டிருந்தபோது பேன்டோகிராப் பழுதின் காரணமாக ½ மணி நேரத்திற்கும் மேலாக நின்றது.

இதனால் காஞ்சீபுரம் ரெயில் நிலையத்துக்கு 7.20 மணிக்கு வரக்கூடிய ரெயில் நீண்ட நேரமாக வரவில்லை.

முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரெயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 9.30 மணிக்கு காஞ்சீபுரத்தில் இருந்து புறப்படக்கூடிய ரெயில் மூலம் 8.50 மணியளவில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த ரெயிலானது புறப்பட்ட சற்று நேரத்திலேயே திருமால்பூரில் இருந்து 7.00-க்கு புறப்பட்ட ரெயிலானது சுமார் 8.55 மணிக்கு காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அதனை 9.30 மணிக்கு இயக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில் நேரத்தை மாற்றியமைந்தற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் நிலைய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தான் பணிகளுக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்‌.

இந் நிலையில் ரெயில் நிலைய அதிகாரி அவர்களை தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. ரெயில் பயணிகள் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பயணிகள் புகார் புத்தகத்தை கேட்ட நிலையில் அதிகாரிகள் புகார் புத்தகத்தை தர மறுத்ததாக தெரிகிறது. மேலும் வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் மாற்று விரைவு ரெயில் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு

அந்த ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்கு உரிய நேரத்தில் வராததால் வேறு வழியின்றி செங்கல்பட்டில் இருந்து தினந்தோறும் 8.40 மணிக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில் நிலையங்களிலும் நிற்ககூடிய சென்னை கடற்கரை சாதாரண ரெயிலை விரைவு ரெயிலாக மாற்றியமைக்க இருப்பதாக ரெயில் நிலையத்தில் தெரிவித்தனர்.

இதனால் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, வண்டலூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். அந்த ரெயிலை விரைவு ரயிலாக மாற்றக்கூடாது என்று பொதுமக்கள் வாக்குவாததில் ஈடுபட்டு ரெயில்மறியலிலும் ஈடுபட்டனர்.

பின்னர் பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று அந்த ரெயில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நிற்கும் சாதாரண ரெயிலாக இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில் ரெயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story