சோலைமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா


சோலைமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா
x

சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அடுத்த மாதம் 13-ந்தேதி தொடங்குகிறது.

மதுரை

அழகர்கோவில்,

சோலைமலை முருகன் கோவில்

அழகர்கோவில் மலையில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி விழாவும் ஒன்றாகும். இந்த கந்த சஷ்டி திருவிழா அடுத்த(நவம்பர்) மாதம் 13-ந் தேதி காலையில் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. அன்றே பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்குவார்கள்.

அன்று காலையில் சண்முகார்ச்சனை, மகா அபிஷேகம், பின்னர் அன்ன வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் வலம் வருவார்.

தொடர்ந்து 14-ந்தேதி காலையில் வழக்கம் போல் பூஜைகள், பின்னர் 11 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 15-ந் தேதி யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு,. 16-ந்தேதி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 17-ந்தேதி சப்பர வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

சூரசம்ஹாரம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார விழா 18-ந் தேதி நடக்கிறது. இதில் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலையில் 4.15 மணிக்கு வேல் வாங்குதல், தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி, அன்று மாலை 4.30 மணிக்கு கோவிலின் ஈசான திக்கில் கஜமுகா சூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசூரனையும், ஸ்தல விருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனையும் சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.

மறுநாள்(19-ந்தேதி) காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், பல்லக்கு வாகனத்தில் சுவாமி புறப்பாடும், அன்று மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், கோவில் துணை ஆணையர் ராமசாமி, திருக்கோவில், அலுவலர்கள், உள்துறை, பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story