சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்


சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
x
திருப்பூர்


காங்கயம் பங்களாபுதூர் சாலையில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அப்பகுதியில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் கழிவுநீர் சாலையில் நீண்ட தூரம் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் தோற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் சாலையில் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைய வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நேரில் சென்று பார்வையிட்டு கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்து, கழிவுநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story