விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கயம், வெள்ளகோவிலில் கடைகள் அடைப்பு


விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கயம், வெள்ளகோவிலில் கடைகள் அடைப்பு
x
திருப்பூர்


உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கயம், வெள்ளகோவிலில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

விவசாயிகளின் சாலை மறியலை தொடா்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர் உண்ணாவிரத போராட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பகவதிபாளையத்தில் கரூா் ரோட்டு ஓரத்தில் பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கயம் -வெள்ளகோவில் ) நீா் பாதுகாப்பு சங்கம் சாா்பில் விவசாயிகள் கடந்த 7 நாட்களாக தொடா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தில் அவா்கள் பி.ஏ.பி. பாசன கால்வாய் பகுதிகளில் தண்ணீா் திருட்டை தடுக்க வேண்டும்.

மற்ற பகுதிகளில் உள்ளது போன்று மடைக்கு 7 நாட்கள் சமச்சீா் பாசனம் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சிதிலமடைந்த வாய்க்கால்களை சாிசெய்ய வேண்டும். பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சீரமைப்பில் நீண்டகால அடிப்படையில் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும். பி.ஏ.பி. தொகுப்பணைகளின் பழுதடைந்த ஷட்டா், உபகரணங்களை மாற்ற வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோாிக்கைகளை முன்வைத்துள்ளனா்.

150 பேர் கைது-வழக்கு

200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ள நிலையில் அவா்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், விவசாய அமைப்புகள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தொிவித்து வந்தனா். ஆனால் அரசு தரப்பில் எந்த அதிகாாிகளும் வந்து பேச்சு வாா்த்தை நடத்தவில்லை.

இந்த நிலையில் கடந்த 25-ந்தேி சுமாா் 150 விவசாயிகள் காங்கயம் தாசில்தாா் அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனா். அதைத்தொடா்ந்து போலீசாா் அவா்கள் அனைவரின் மீதும் சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துதல் என்னும் 2 பிாிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.

கடைகள் அடைப்பு

அதைத்தொடா்ந்து நேற்று முன்தினம் விவசாயிகள் காங்கயம், வெள்ளகோவிலில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனா். அதன்படி நேற்று காங்கயம் மற்றும் வெள்ளகோவிலில் காலை முதல் மாலை வரை மருந்தகங்கள், பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், பால் கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் விவசாயிகளுக்கு ஆதரவு தொிவித்து அடைக்கப்பட்டன.

இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனா். ஓட்டல்கள், பேக்காிகள் அடைக்கப்பட்டு இருந்ததால் வெளியூா் பயணிகள் அவதிக்குள்ளாகினா். மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வணிகம் நேற்று பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

இந்த நிலையிலும் அதிகாாிகள் யாரும் பேச்சுவாா்த்தைக்கு வராததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ஒன்று திரண்டு கரூா் ரோட்டில் முத்தூா் ரோடு பிாிவு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசாா் போக்குவரத்தை சாிசெய்தனா். மேலும் போராட்டக்காரா்களிடம் போலீசாா் பேச்சு வாா்த்தை நடத்தினா். அதைத்தொடா்ந்து மாலை 5 மணிக்கு மாவட்ட அதிகாாிகள் காங்கயம் தாசில்தாா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்துவாா்கள் என போலீசாா் தொிவித்தனா்.

அதன்பின்பு விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.இதனிடையே உண்ணாவிரத போராட்ட பந்தலில் நேற்று 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் மயங்கி விழுந்தனா். அவா்களோடு மொத்தம் 14 போ் மயக்கமடைந்துள்ளனா். இந்த நிலையில் மேலும் சிலாின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

===========


Next Story