2-வது நாளாக கடையடைப்பு போராட்டம்


2-வது நாளாக கடையடைப்பு போராட்டம்
x
திருப்பூர்


காங்கயம் நகராட்சியில் அனுமதியின்றி கடை நடத்தும் வியாபாரிகளால் நகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட் காய்கறி கடைகள், மளிகை கடைகள் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மனு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தை எதிர்த்து காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாவது நாளாக நேற்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கிறது.

மொத்த வியாபார சந்தை நடைபெறும் இடத்தில் வியாபாரிகள் கடை அமைத்து செயல்பட்ட காரணத்தினாலும் சாலையோர கடைகள் அமைத்து காய்கறி வியாபாரம் நடைபெற்று வரும் காரணத்தினாலும் நகராட்சி வணிக வளாக கடைகளில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் வியாபாரம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்டு வரும் உழவர் சந்தை வியாபாரிகள் உள்ளூர் மொத்த வியாபாரிகளிடமிருந்து காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருவதை கண்டித்து நகராட்சியில் புகார் செய்திருந்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடைகள் அனைத்தும் நேற்று முன்தினம் முதல் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story