கன்னிகா பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு


கன்னிகா பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கன்னிகா பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தில் கன்னிகா பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மகாகுடமுழுக்கு விழா நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் அனுக்ஞை மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மஹா பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு விமான குடமுழுக்கு மற்றும் மூலவர் குடமுழுக்கு ஆகியவை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிறப்பாக நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருவேள்விக்குடி கிராமமக்கள், கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story