கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை


கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 16 July 2023 10:53 PM IST (Updated: 17 July 2023 3:47 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டத்தில் கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்

தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 7-வது மண்டலத்தின் செயற்குழு கூட்டம் திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் சங்க தலைவர் ஜெயராமன் வரவேற்புரையாற்றினார். மண்டல செயலாளர் எஸ்.ஸ்டாலின்பாரதி அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலத் தலைவர் டி.ராஜேஷ், மாநில துணைத்தலைவர் விஜயபானு, மாநில மக்கள் தொடர்பு அலுவலர் சரவணராஜா, மாநில உதவி தலைவர் அறிவழகன், மாநில முன்னாள் தலைவர் தில்லைராஜன், மாநில முன்னாள் பொருளாளர் எஸ்.பொன்னுசாமி மற்றும் 7-வது மண்டலத்தைச் சார்ந்த திருப்பூர், கோவை, உடுமலை,தாராபுரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காங்கயம் பொறியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். திருப்பூர் சங்க செயலாளர் ஆர்.பிரகாஷ் நன்றி கூறினார். கூட்டத்தில் கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லி, எம்சாண்ட் விலை உயர்வை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரம் இல்லாத எம்சாண்ட் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிமெண்டை அத்தியாவசிய விளைபொருட்கள் பட்டியலில் கொண்டு வருவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கோவை சங்கத்தலைவர் ராமகிருஷ்ணன் உடுமலை சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன், தாராபுரம் சங்கத் தலைவர் முருகானந்தம், பொள்ளாச்சி சங்கத் தலைவர் ஜவகர் பாண்டியன், மேட்டுப்பாளையம் சங்கத் தலைவர் கார்த்திகேய பிரபு, காங்கயம் சங்கத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட ஏழாவது மண்டலத்தை சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story