தாரமங்கலத்தில்ஆதிபராசக்தி கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்


தாரமங்கலத்தில்ஆதிபராசக்தி கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்
x
சேலம்

தாரமங்கலம்

தாரமங்கலம் நகராட்சி 1-வது வார்டு கரியபெருமாள் கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள 41 அடி உயர ஓம்சக்தி ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி பொன்னாண்டிவளவு விநாயகர் கோவிலில் இருந்து கஞ்சி கலயம். பால்குடம். தீர்த்தக்குடம். அக்னி கரகம் எடுத்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

நான்கு ரோடு வழியாக கரியபெருமாள் கோவில் அடிவாரத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு ஊர்வலம் சென்றடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் செய்திருந்தனர்.

1 More update

Next Story