கஞ்சி கலய ஊர்வலம்


கஞ்சி கலய ஊர்வலம்
x

கிள்ளையில் கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

கிள்ளையில் நகர ஓம்சக்தி வார வழிபாடு மன்றம் சார்பில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கஞ்சி கலயஊர்வலம் நடந்தது. இதற்கு நகர தலைவர் மீனாட்சி பாஸ்கரன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் தலையில் கஞ்சி கலயத்தை சுமந்தபடி ஓம் சக்தி மன்றத்தில் இருந்து கிள்ளை கடை வீதி, எம்.ஜி.ஆர். திட்டு வழியாக சிந்தாமணி கோவிலுக்கு சென்றனர். பின்னர் அம்மனுக்கு கஞ்சி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக கஞ்சி வழங்கப்பட்டது.


Next Story