கஞ்சி கலய ஊர்வலம்


கஞ்சி கலய ஊர்வலம்
x

குன்னூரில் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடிப்பூர விழா நேற்று நடைபெற்றது. மன்ற தலைவி பிரபாவதி தலைமை தாங்கினார். காலை 8 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 11 மணிக்கு குன்னுர் தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை குன்னூர் நகராட்சி துணை தலைவர் வாசிம் ராஜா, கவுன்சிலர் ராமசாமி தொடங்கி வைத்தனர். கஞ்சி கலய ஊர்வலம் மவுண்ட் ரோடு, பஸ் நிலையம் வழியாக சென்று வழிப்பாட்டு மன்றத்தை வந்தடைந்தது. இதில் ஆதிபராசக்தி அம்மனுக்கு 450-க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் தலையில் கஞ்சி சுமந்து வந்து கஞ்சி வார்ப்பு நிகழ்த்தினர். அனைவருக்கும் கஞ்சி பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story