காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் மாத வாடகைக்கு ஏலம்


காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் மாத வாடகைக்கு ஏலம்
x
தினத்தந்தி 22 Jun 2023 3:55 PM IST (Updated: 22 Jun 2023 5:07 PM IST)
t-max-icont-min-icon

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் மாத வாடகைக்கு ஏலம்

திருப்பூர்

காங்கயம்

காங்கயத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடம் ஒரு வாரத்தில் திறக்கப்பட்டு அந்தக் கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட உள்ளது. இதையடுத்து பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை வணிக நோக்கத்திற்காக மாத வாடகை அடிப்படையில் விடுவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் விமலா தேவி தலைமையில் ஏலம் நடைபெற்றது. இதில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தொகையாக ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் காங்கயம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் கலந்து கொண்டனர்.

இதில் காங்கயம் தாலுகா நிழலி பகுதியைச் சேர்ந்த எஸ்.எஸ்.விஜயகுமார் என்பவர் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 410 ஏலம் எடுத்துள்ளார். இந்த தொகை ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியுடன் சேர்த்து ஒரு மாத வாடகைத் தொகையாகும். 3 வருட கால ஒப்பந்த அடிப்படையில் இந்த ஏலம் நடைபெற்றது. தற்போது உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் புதிய கட்டிடத்திற்கு மாற்றலான தேதியிலிருந்து, பழைய கட்டிடம் தனியாரின் பயன்ப பயன்பாட்டுக்கு வரும் என ஊராட்சி ஒன்றிய ஆணையர் விமலா தேவி தெரிவித்துள்ளார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



Next Story